KKR அணிக்கு 104 ரன்களை இலக்காக நிர்ணயித்து CSK. டாஸ் வென்ற KKR பௌலிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த CSK அணி பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். KKR அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் CSK 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. ஐபிஎல்-ல் CSK-ன் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். தோனி தலைமையில் CSK இந்த மோசமான சாதனையை படைத்துள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.