நீண்ட இழுபறிக்கு மத்தியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மும்பையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒரு கடினமான வாய்ப்பு மட்டுமே எஞ்சியுள்ளது. இதன்படி, சிஎஸ்கே தனது இறுதி லீக் போட்டியில் குஜராத் அணியை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வீழ்த்துவது மிக அவசியமாகும். அதோடு மட்டுமல்லாமல் பஞ்சாப், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 அணிகளும் தங்களது கடைசி போட்டிகளில் தோல்வியடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.