தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச்.4) தவெக தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், "கிரிக்கெட்டில் விசில் போடுவது சிஎஸ்கே என்றால், தமிழ்நாட்டு அரசியலில் விசில் போடுவது தவெகவாகத்தான் இருக்கும்" என ஆவேசமாக உரையாற்றினார். மேலும், திமுக ஒரு தீயசக்தி என இன்று சிறுவர்கள் கூட கூறுகிறார்கள் என விமர்சித்துள்ளார்.