சி.எஸ்.கே.- ஐதராபாத் போட்டி: சென்னை மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 18 (திங்கள்கிழமை) நடைபெறவுள்ள சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை முன்னிட்டு, ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ ரயில் பயண வசதி மற்றும் சிறப்புச் சேவைகளை சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிப் பயணச்சீட்டு (டிஜிட்டல் அல்லது அச்சுப் பிரதி) வைத்துள்ளவர்கள், அதில் உள்ள பிரத்யேக QR குறியீட்டை ஸ்கேன் செய்து சென்னையின் எந்தவொரு மெட்ரோ நிலையத்திலிருந்தும் சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையம் வரை பயணிக்கலாம்.

தொடர்புடைய செய்தி