2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி ஆல்-ரவுண்டரான லியம் லிவிங்ஸ்டனை ரூ.6 கோடிக்கும், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸை ரூ.3 கோடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்குப் பதிலாக, வேகப்பந்து வீச்சாளர்கள் கலீல் அகமது ரூ.4.8 கோடிக்கும், நாதன் எல்லிஸ் ரூ.2 கோடிக்கும் சன்ரைசர்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் 'Still on the hunt' என குறிப்பிட்டு மேலும் சிலர் CSKவில் இணையலாம் என ஹிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.