மாசுபாட்டைக் குறைப்பதற்கும் எரிபொருளைச் சேமிப்பதற்கு மிகச்சிறந்த வழிகளில், சூரிய ஆற்றலும் ஒன்றாகும். சூரிய ஆற்றலைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான புதிய யோசனைகளையும் இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். அத்தகைய அற்புதமான கண்டுபிடிப்புகளில் ஒன்று 'சூரிய மரம்' (Solar Tree). இதனை CSIR-CMERI நிறுவனம் உருவாக்கியுள்ளது. துர்காபூரில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் குடியிருப்பு வளாகத்தில் இது நிறுவப்பட்டுள்ளது.