சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த யோகானந்த் (43) என்பவர், முகநூல் மூலம் அறிமுகமான நபர்களின் 'சின் செயின்' செயலி மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் மூன்று மடங்கு லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையை நம்பி, சுமார் 13 வங்கி கணக்குகளில் ரூ.1 கோடியே 73 லட்சத்து 48 ஆயிரத்து 330 வரை முதலீடு செய்துள்ளார். பின்னர், மோசடியை உணர்ந்த அந்நபர், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.