வடகொரியாவில் 'ஸ்குவிட் கேம்' தொடர் பார்த்த பள்ளி சிறுவர்களுக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் கலாசார தொடர்களை பார்ப்பதற்கு வடகொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு இந்த தண்டனையை நிறைவேற்றியுள்ளது. அங்கு இத்தகைய செயல்கள் தேச துரோகமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.