மாணவனின் கையை எரித்த கொடூர ஆசிரியை

மும்பை மாலாட் பகுதியில் கடந்த ஜூலை 28-ம் தேதி ராஜஸ்ரீ ரத்தோர் என்ற ஆசிரியை தன்னிடம் டியூஷன் படித்து வரும் மாணவன் ஹம்சா கானின் கையெழுத்து நன்றாக இல்லை என கூறி சிறுவனின் கையை தீயில் காட்டி எரித்துள்ளார். இதில், அச்சிறுவனின் உள்ளங்கையில் காயம் ஏற்பட்டு புண்ணாக மாறியுள்ளது. இதையடுத்து, மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி