அமெரிக்கா, ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் 17 சதவிகிதம் வரை விலை குறைந்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாட்டின் கப்பல்களும் செல்ல அனுமதிக்கப்படும் என ஈரான் அறிவித்த நிலையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 95 டாலராக சரிந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள் உயர்த்திய பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.