ஈரான்-அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் சமாதான பேச்சுவார்த்தை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக சரிந்து வருகிறது. இதன்படி, WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் 87.36 டாலராகவும், UAE-ன் முர்பான் எண்ணெய் 90.05 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது. முக்கிய கடல்வழியான ஹோர்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்பட்டால், கச்சா எண்ணெய் விலை 60 டாலருக்கும் கீழ் சரியலாம் என்பதால், உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.