டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் மெதுவாக செல்லும் போது கார் வெடித்ததாக காவல் ஆணையர் சதீஷ் கோல்சா கூறியுள்ளார். சரியாக மாலை 6.52 மணிக்கு சிக்னலில் கார் வெடித்துள்ளது. கார் வெடித்தபோது சிக்னலில் அருகில் இருந்த கார்கள் தீப்பற்றி எரிந்தன. ஒன்றிய உள்துறை அமைச்சர் எங்களை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார். தற்போது விபத்து குறித்து எதையும் கூற இயலாது என்றும், முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நன்றி: நியூஸ் தமிழ்