செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே பரமேஸ்வரமங்கலம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரின்றி கருகி வருகின்றன. சொர்ணவாரி பருவ சாகுபடிக்காக பயிர் கடன் பெற்று விவசாயம் செய்த விவசாயிகள், உரங்களுக்கும் சாகுபடிக்கும் செலவிட்ட நிலையில் பயிர்கள் வாடி வருவதால் கடும் வேதனையில் உள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.