தமிழகத்தில் 'டிட்வா' புயல் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளுக்கு, வரும் பிப்.15 முதல் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.111.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், 33 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நிதி நேரடியாக வரவு வைக்கப்படும். குறிப்பாக, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு ஒரு வாரத்திற்குள் இழப்பீடு வழங்கப்படுமென அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.