பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இம்மசோதாவில், பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்களில் மரணிக்கும் வரை சிறையிலிருக்கும் வகையிலும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், மீண்டும், மீண்டும் வன்கொடுமை குற்றமிழைப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.