ஓட்டுக்கு ரூ.5000 கொடுக்கும் தவெக.. CPM சண்முகம் காட்டம்

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெகவினர் வாக்காளர்களுக்குப் பகிரங்கமாகப் பணம் வழங்கி வருவதாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தவெக தரப்பில் ஓட்டுக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை வழங்கப்படுவதாக வாக்காளர்களே கூறியதாகத் தெரிவித்த அவர், எவ்வித மறைமுகமும் இன்றிப் பட்டப்பகலில் வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகச் சாடியுள்ளார். கம்யூனிஸ்டுகளின் இந்த தொடர் குடைச்சலால் விஜய் அப்செட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி

✕
✕