சிபிஐ, சிபிஎம், விசிக ஒரே நிலைபாட்டைதான் எடுப்போம் என சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றால் எங்களது ஆதரவு முடிவை மறுபரிசீலனை செய்வோம். இடதுசாரிகள், விசிக ஒரே நிலைபாட்டைத்தான் எடுப்போம் என கூறினார். முன்னதாக அதிமுக எஸ்.பி.வேலுமணி தரப்பின் 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்த நிலையில், அமைச்சரவையில் இடம்பெறுவதாகவும் தகவல் வெளியானது.