தஞ்சாவூர் பெரியகோயிலில் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு 108 பசுமாடுகளுக்கு கோ-பூஜை நடைபெற்றது. பக்தர்களால் வழங்கப்பட்ட 2 டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் கொண்டு நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 108 பசுமாடு கன்றுகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, மலர் தூவி, வேஷ்டி, சேலை, துண்டு போன்ற வஸ்திரங்களை போர்த்தி கோ-பூஜை வழிபாடு நடத்தப்பட்டது.