குடிநீர் பாட்டில்களில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் மனித ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால், அதுகுறித்த எச்சரிக்கை வாசகம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்கள் நீண்ட காலம் பயன்படுத்தப்படும்போது அல்லது அதிக வெப்பத்திற்கு உட்பட்டால், மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் நீரில் கலக்கும் அபாயம் அதிகம். இது உடலில் சென்று ஹார்மோன் மாற்றம், செரிமான பிரச்னை உள்ளிட்ட பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.