தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை, அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிடும் எக்ஸ் தள கணக்குகளை முடக்கி, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த முடக்கத்தை நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 18 சமூக வலைதள பக்கங்களின் முடக்கத்தை நீக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக அரசும், காவல்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டனர்.