கிரிக்கெட் வீரர் தோனி ரூ.10 லட்சம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு

கிரிக்கெட் வீரர் தோனி ரூ.10 லட்சம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில், தோனிக்கும் தொடர்பு இருப்பதாக, சம்பத்குமார், தனியார் டிவி  நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சியின் சிடியை எழுத்து வடிவமாக மாற்றுவதற்கு கட்டணமாக ரூ.10 லட்சத்தை மார்ச் 12ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி