"பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்" என அனைத்து அமர்வு நீதிமன்றங்கள் மற்றும் மகளிர் நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்சோ வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றங்களில் ஈடுபடும் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை டிஜிபி உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
நன்றி: newstamil24x7