இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கும்கி 2’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த படம் இன்று (நவ.14) ரிலீஸாக இருந்த நிலையில், தயாரிப்பிற்காக வாங்கிய ரூ.2.5 கோடி பணத்தை திருப்பித் தரவில்லை என சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை எதிர்த்து பிரபு சாலமன் வழக்கு தொடர்ந்த நிலையில், இன்று நீதிமன்றம் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி வழங்கியது.