தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வாங்கித் தருவதாக பணமோசடி செய்த வழக்கில் கைதான பி.டி.அரசகுமாருக்கு ஜாமின் வழங்கி சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. விசாரணை அதிகாரி முன்பு தினமும் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்கக்கூடாது, தலைமறைவாகக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், அவரது உறவினர் வாளாடி கார்த்தி உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அண்மையில் சோதனை நடத்தியிருந்தனர்.