டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் CBI குற்றப்பத்திரிக்கையில் “South Group” என குறிப்பிட்டு இருப்பதற்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “வழக்கில் வட இந்தியாவைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் 'North Group' என்று அடையாளம் காணப்படவில்லை. ஆனால் தென்னிந்தியாவைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் 'South Group' என்று ஏன் முத்திரை குத்தப்பட்டுள்ளனர்?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.