கர்நாடக மாநிலத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட அனைத்து பைக் டாக்ஸிகளுக்கும் வரும் ஜூன் 16-ம் தேதி முதல் தடை விதித்து மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளாததே இந்த தடைக்கு காரணம். அரசு புதிய சட்டத் திருத்தங்களை கொண்டு வரும் வரை இத்தடை தொடரும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் பாதிப்படைவார்கள் என கூறப்படுகிறது.