திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வடமாதிமங்கலம் ரயில் நிலையத்தில் கணவனின் நுரையீரல் நோய்க்குச் சிகிச்சை பெற்றுத் திரும்பியபோது, ரயில் மோதி சந்திரகுமார் - சிந்து தம்பதி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வேலூரில் தங்களது வழக்கமான சிகிச்சையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியபோது இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து காட்பாடி இரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.