செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரியில் கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து பிரியாணி டபராவில் வைத்து சமைக்க முயன்ற மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் அவரது மனைவியை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவரையும் வரும் செப்.16-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நன்றி:NewsTamil