பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவ., 14) காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன. கடந்த 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்த நிலையில், 38 மாவட்டங்களில் உள்ள 46 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. என்டிஏ கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், பீகாரில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது மதியம் 2 மணிக்குள் தெரிந்துவிடும்.