தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில், ஊரக வளர்ச்சித் துறையின் முதல் டெண்டரே ஊழல் புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், "அமைச்சருக்குத் தெரியாமல் எப்படி டெண்டர் விடப்பட்டது? இது தூய ஆட்சி அல்ல, மக்களை ஏமாற்றும் ஆட்சி" என்று திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.