ஞானேஷ் குமார் மீதான லஞ்சப் புகார்: கேரள உள்துறை அமைச்சர் உத்தரவு

இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், 2005-ல் கேரள பொதுப்பணித்துறை செயலாளராக இருந்தபோது மலேசிய நிறுவன பொறியாளரிடம் ரூ. 2 கோடி லஞ்சம் கேட்டதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்த, கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா அனுமதி அளித்துள்ளார். கேரள மாநில போக்குவரத்து திட்டத்தின் கீழ் சாலை பணிகளை மேற்கொண்டபோது, காலதாமதம் காரணமாக ரூ. 17 கோடி ஒப்பந்தத் தொகையை அரசு நிறுத்தி வைத்த சூழலில், இந்த முறைகேடு புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

✕
✕