பிராட்வேயில் நடக்கும் வளர்ப்பு பிராணிகள் சந்தைக்கு மாநகராட்சி தடை

சென்னை பிராட்வேயில் உள்ள மஸ்கான்சாவடி கோழி மார்க்கெட் பகுதியில் ஞாயிறுதோறும் நடைபெறும் செல்ல பிராணிகள் விற்பனைக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து இடையூறு மற்றும் பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தடையை மீறி செல்ல பிராணிகளை விற்பனை செய்வோர் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕