நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,395 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று ஒரே நாளில் 685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கேரளா 1336, மகாராஷ்டிரா 467, டெல்லி 375, குஜராத் 265, கர்நாடகா 234, மே.வ 205 மற்றும் தமிழ்நாடு 185 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், நேற்று டெல்லி, கர்நாடகம், கேரளம், உ.பி-யில் தலா ஒருவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது