திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பலரும் 5 சவரன் வரை நகைக்கடன் பெற விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நகைக்கடன் தள்ளுபடி செய்ய ரூ.25,000 கோடி வரை தேவைப்படும். இது அரசுக்கு மேலும் கடன் சுமையை உண்டாக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தபோதிலும், அதிமுகவும், திமுகவும் தங்களது தேர்தல் வாக்குறுதியில் நகைக்கடன் தள்ளுபடியை அறிவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.