இறக்குமதி செய்யப்படும் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரியை இந்திய அரசு 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைத்த நிலையில் இந்த 3 எண்ணெய்களுக்கான அனைத்து கட்டணங்களை உள்ளடக்கிய இறக்குமதி வரி 16.5 சதவீதமாக குறைந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் பாமாயில், சூரியகாந்தி போன்ற சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.