டெல்லியில் வெடிகுண்டுகளுடன் கார் வெடித்ததில் 15 பேர் உயிரிழந்த சம்பவத்தின் குற்றவாளியான உமர் நபி பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், உமர் நபி தற்கொலை படைத் தாக்குதலை நியாயப்படுத்தி பேசியுள்ளார். தாக்குதலை நடத்துவது ஒரு தியாகம் என்றும் அவர் பெருமையாக பேசியிருந்தார். டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்வதற்குச் சில மாதங்களுக்கு முன் உமர் நபி பேசிய இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.