கொளத்தூர் தொகுதி தவெக MLA வி.எஸ்.பாபு தீவிர உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, மக்கள் பிரதிநிதி ஒருவரின் உடல்நிலை குறித்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக எந்தவொரு மருத்துவ அறிக்கையும் வெளியிடப்படாதது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டு மருத்துவமனை நிர்வாகம் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அவரது உடல்நிலை குறித்த தகவலை உடனடியாக வெளியிட கோரிக்கைகள் எழுந்துள்ளன.