ஒரு நிகழ்ச்சியில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பங்கேற்பதாக ஒரு மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பரவிய தகவல்களுக்குப் பதிலளித்த அனுராக் காஷ்யப், தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும், மேடைப் பேச்சுக்கு வரும் அழைப்புகளுக்கு அரிதாகவே பதிலளிப்பதாகவும், பெய்ஜிங் பகுதிக்குச் சென்றதில்லை என்றும், இது சில ரேண்டம் மின்னஞ்சல் என தெரிவித்துள்ளார். தன் பெயரில் வரும் செய்திகள் படங்களைவிட அதிகம் பிரபலமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.