பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதி அசீம் முனீர் அந்நாட்டின் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்புக்கு பரிசளித்த போட்டோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் போர் வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில் அசீம் முனீர் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். அந்த விருந்தில் அசீம், இந்தியாவை இப்படித்தான் தாக்கி வென்றோம் என்று கூறி அந்த விருந்தில் ஒரு போட்டோவை வழங்கியுள்ளார். இந்நிலையில், அந்த போட்டோ 2019-ல் எடுக்கப்பட்டது என இணையத்தில் விவாதம் வெடித்துள்ளது.