திருப்பதியில் அசைவம் உண்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பதி ஏழுமலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில், தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரியும் ராமசாமி மற்றும் சரசம்மா ஆகியோர் அசைவ உணவு உட்கொண்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, இரு ஒப்பந்த ஊழியர்களையும் பணிநீக்கம் செய்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.