தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு சில பகுதிகளில் மழை பெய்யு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்றும் (செப்.22) நாளையும் (செப்.24) வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25, 26 தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 27, 28 தேதிகளில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய உள்ளது.