“ஊரக, நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என நாதக சீமான் வலியுறுத்தியுள்ளார் மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், “பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட உரிமைகளுக்காகப் போராடும் ஊரக, நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்களை, பெண்கள் என்றும் பாராம காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி சிறையில் அடைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. வாழ்வாதார உரிமையை வழங்க மறுக்கும் திமுக அரசு, அறவழியில் போராடக்கூட அனுமதி மறுப்பது கொடுங்கோன்மையாகும்” என்றார்.