விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டுச் சென்னையிலிருந்து மக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். ரயில்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு முடிந்துவிட்ட சூழலில், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல வழக்கத்தை விடக் கூடுதலாக ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.