சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று (ஜூலை 10) நேரில் ஆஜராகிய சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மன்னிப்பு கேட்டார். நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை எனவும் நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பு ஏற்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். மன்னிப்புக் கோரியதன் காரணமாக, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை நீதிமன்றம் திரும்பப் பெற்றது. சட்டவிரோத கட்டிடங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில் ஆணையர் ஆஜராகாததால் நீதிமன்றம் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது.
நன்றி: தந்தி