கூடுதல் தொகை செலுத்தினால் விரைவில் வாகனம் கிடைக்கும் என்ற 'Uber' செயலியின் நடைமுறைக்கு எதிராக, ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. "இது நியாயமற்றது மற்றும் நுகர்வோரை சுரண்டக் கூடியது" என நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார். 'Uber' மட்டுமல்லாமல் 'Rapido', 'Ola' போன்ற செயலிகளும் இந்த முறையை பின்பற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.