வரவிருக்கும் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, காங்கிரஸ் தலைமை அமைத்த 5 பேர் கொண்ட குழுவினர் இன்று (டிச. 3) திமுகவுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர். இந்த கூட்டத்தில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 40 இடங்களை கேட்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.