தமிழகத்தில் கட்டுமான பொருட்கள் விலை குறைய வாய்ப்பு

தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிமப் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வீடு, கட்டிடம், சாலை மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவையான ஜல்லி, எம்-சாண்ட், கருங்கல் எளிதாகக் கிடைக்கும். இதன் மூலம் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு, கட்டுமானச் செலவுகள் குறைய வாய்ப்புள்ளது. முன்னதாக, நாள் ஒன்றுக்கு 1,200 முதல் 1,500 லாரி லோடுகள் வரை கனிமப் பொருட்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்றதாகவும், இதில் கேரளாவுக்கு மட்டும் 1,000 லோடுகள் சென்றதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி