"திமுக தரப்பில் பேச்சுவார்த்தைக்குழு அமைக்காதது வருத்தம் தருகிறது" என காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுவதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். டெல்லியில் இன்று (பிப்.10) ராகுல் காந்தி நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற பிறகு செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தொகுதி பங்கீடு குறித்து பேச பேச்சுவார்த்தைக் குழுவை திமுக உடனே அமைக்க வேண்டும். பேச்சுவார்த்தை தொடங்காததால் காங்கிரஸ் கட்சியின் வேலைகள் தடைபட்டுள்ளன” என்றார்.
நன்றி: நியூஸ்18