தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், விஜயை ஆட்சி அமைக்க விடாமல் திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்தார். இதற்கு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தேர்தல் முடிவு வந்தபின்பு காங்கிரஸ் கட்சியினர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவே இல்லை. தொலைபேசியில் கூட நன்றி தெரிவிக்காமல் சென்றவர்கள் காங்கிரஸ் கட்சியினர்; அவர்கள் தான் நன்றி கெட்டவர்கள்” என விமர்சித்தார்.