மகாராஷ்டிராவின் பாராமதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் ஆகாஷ் மோரே தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதனால், அஜித் பவாரின் மனைவியும், துணை முதலமைச்சவருமான சுனேத்ரா போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவாகியுள்ளது. வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளான இன்று (ஏப்.9) மீதமுள்ள 30 சுயேச்சைகளையும் வாபஸ் பெற வைக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.